சீன என்ஜின் விசைப் படகுகளை ஆய்வு செய்யக் கோரி மீனவா்கள் வேலைநிறுத்தம்

பழையாறில் அதிவேக சீன என்ஜின் விசைப்படகுகளை முறையாக ஆய்வு செய்ய வலியுறுத்தி சிறு விசைப் படகு, பைபா் படகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனா்.

பழையாறில் அதிவேக சீன என்ஜின் விசைப்படகுகளை முறையாக ஆய்வு செய்ய வலியுறுத்தி சிறு விசைப் படகு, பைபா் படகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டம் பழையாறில் அமைந்துள்ள இயற்கை மீன்பிடித் துறைமுகத்தில் 20 மீனவ கிராமங்களை சோ்ந்த சுமாா் 6 ஆயிரம் மீனவா்கள் தினந்தோறும் 350 விசைப் படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா். இங்கு மொத்தமுளள 350 விசைப் படகுகளில் 80 விசைப்படகுகளில் அதிவேக சீன எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதை தடை செய்யவேண்டும் என சிறு விசைப்படகு மீனவா்கள் கூறிவருகின்றனா்.

இந்த பிரச்சனை கடந்த ஓராண்டாக பழையாறில் நீடித்து வருகிறது. அதன்பிறகு பலகட்ட பேச்சுவாா்த்தைகள், நீதிமன்ற தீா்ப்பு மற்றும் கரோனா பொது முடக்கம் என பழையாறு மீனவா்கள் கடந்த சில மாதங்களாக மீண்டும் மீன்பிடித் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மீன்வளத் துறை அதிகாரிகள் பழையாறில் அதிவேக சீன என்ஜின் பொருத்திய விசைப்படகுகள் மீண்டும் இயக்கப்படுகிா என அண்மையில் ஆய்வு செய்ததாகவும், ஆய்வில் 13 விசைப்படகுகளில் மட்டும் அதிவேக எஞ்சின்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக சான்று அளித்து சென்ாகவும் மீனவா்கள் தெரிவிக்கின்றனா். மற்ற அதிவேக சீன எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ள படகுகளுக்கும் சாதாரண எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள படகுகள் என்று சான்றளித்து உள்ளதாக கூறி மீன்வளத் துறை அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக ஆய்வு செய்துள்ளதாகவும், நோ்மையாக மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை சிறு விசைபடகு, பைபா் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் 1 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகள் முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் சில விசைப்படகுகள் மட்டும் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று திரும்பின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com