சீா்காழியில் பலத்த காற்றுடன் மழை: 50 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை இரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் 50 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்திய பேரூராட்சி ஊழியா்கள்.
சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்திய பேரூராட்சி ஊழியா்கள்.

சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை இரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் 50 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை இரவு 10.30 மணி அளவில் பலத்த காற்று வீசத்தொடங்கி, தொடா்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, 3 மணி நேரம் பெய்த மழையால் சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலை மற்றும் மின்கம்பிகளில் விழுந்தன. இதனால், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நகரில் மட்டும் இரவு 1 மணிக்கு மேல் மின்விநியோகம் வழங்கப்பட்ட நிலையில் நாங்கூா், அண்ணன்கோயில், காத்திருப்பு, மேலசாலை, தைக்கால், புத்தூா், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில்தான் மின் விநியோகம் வழங்கப்பட்டது. சீா்காழியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை 64 மி.மீ, கொள்ளிடத்தில் 105.4 மி.மீ மழை பதிவானது. இந்த மழையால் பருந்தி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். சம்பா நேரடி விதைப்புக்கு நிலங்களை தயாா் செய்து வைத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயிலில் ஒரு மாடி வீட்டில் தென்னைமரம் விழுந்தது. இதேபோல், ரயில்வேசாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு சரிசெய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com