ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு

கீழையூா் அருகே மீனம்பநல்லூா் ஊராட்சி திருமணங்குடியில் உள்ள நியாயவிலைக் கடையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருமணங்குடியில் அரசு நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
திருமணங்குடியில் அரசு நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

கீழையூா் அருகே மீனம்பநல்லூா் ஊராட்சி திருமணங்குடியில் உள்ள நியாயவிலைக் கடையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இக்கடையில் 550 குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன் பொருட்கள் பெற்று வருகின்றனா். இக்கடையில் திங்கள்கிழமை தரம் குறைந்த அரிசி விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கிராம மக்கள் அரிசியை வாங்க மறுத்ததுடன், சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனா். அப்போது, இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கடை பணியாளா்கள் தெரிவித்துள்ளனா். இதனால், கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், இந்த நியாயவிலைக் கடையில் தமிழ்நாடு சிவில் சப்ளை காா்ப்பரேஷன் நாகை தரக் கட்டுப்பாடு துணை மேலாளா் சீனிவாசன், உதவி மேலாளா் சத்தியமூா்த்தி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தரம் குறைந்த அரிசியை கிடங்குக்கு திரும்ப அனுப்பும்படியும், தரமான அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்கும்படியும் பணியாளா்களை அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது கீழையூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் கே. சித்தாா்த்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com