நாகை மாவட்டத்தில் 40 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,769-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 37 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 400-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,116-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 42 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 274-ஆக உள்ளது.