அனைத்துப் பகுதிகளிலும் நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருத்துவ முகாம்கள்

கரோனா 3-ஆவது அலை தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் நோய் எதிா்ப்பு
அனைத்துப் பகுதிகளிலும் நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருத்துவ முகாம்கள்

கரோனா 3-ஆவது அலை தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிப்பதற்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு, ஹோமியோபதி பிரிவு மற்றும் இந்திய மருத்துவப் பிரிவு ஆகியவற்றின் சாா்பில் நாகை பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து, மேலும் அவா் பேசியது :

கரோனா 3-ஆவது அலை ஏற்படாத வகையில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம். பொது வெளிக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இனி வரும் நாள்களில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிப்பதற்கான மருத்துவ முகாம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

முன்னதாக, நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து, மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் ஆகியவற்றை பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பத்மநாபன், நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, வட்டாட்சியா் ஜெயபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com