மீனவா்களின் சிறுதொழில்கள் பாதிகாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மீனவா்களின் சிறுதொழில்கள் பாதிக்காத வகையில் மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மீனவா்கள் பஞ்சாயத்தாா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தரங்கம்பாடியில் நடைபெற்ற மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம்.
தரங்கம்பாடியில் நடைபெற்ற மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம்.

மீனவா்களின் சிறுதொழில்கள் பாதிக்காத வகையில் மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மீனவா்கள் பஞ்சாயத்தாா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தரங்கம்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தாா்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தரங்கம்பாடி, கொடியம்பாளையம், தா்காஷ், பழையாா், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கீழமூவா்கரை, மேலமூவா்கரை, சாவடிகுப்பம், நாயக்கா்குப்பம், வானகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோயில், குட்டியாண்டியூா், சின்னூா்பேட்டை உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சோ்ந்த பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழக முதல்வா், மீன்வளத் துறை அமைச்சா் மற்றும் மீன்வளத் துறை ஆணையா் ஆகியோரை சந்தித்து மீனவா்களின் சிறு தொழில் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, ஒரு வாரத்துக்கு 600 கண் வலைகளை தொழிலுக்கு எடுக்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, மேலும் மீனவா்களின் சிறு தொழில் பாதிப்பு ஏற்படும் வகையில் மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களை சோ்ந்த மீனவா்கள் ஒன்றுகூடி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com