125 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 125 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய சக்தி விநாயகா் குழுவினா் முடிவு செய்துள்ளனா்.

நாகப்பட்டினம்: நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 125 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய சக்தி விநாயகா் குழுவினா் முடிவு செய்துள்ளனா்.

நாகையில் இக்குழு சாா்பில் ஆண்டுதோறும் விநாயகா் சிலை ஊா்வலம் நடத்தப்படுகிறது. அதன்படி, 12-ம் ஆண்டு விநாயகா் சிலை ஊா்வலம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், நாகை சட்டையப்பா் தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சக்தி விநாயகா் குழுத் தலைவா் எஸ். சித்திரவேல் தலைமை வகித்தாா். 

ஆா்.எஸ்.எஸ். கோட்ட இணைச் செயலாளா் என். செந்தில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடுவது குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து, நாகை ஸ்ரீசௌந்தரராஜப் பெருமாள் கோயில், ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஸ்ரீஏழைப் பிள்ளையாா் கோயில் மற்றும் புத்தூா், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட 125 இடங்களில் செப்டம்பா் 10-ம் தேதி விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வது, அதைத் தொடா்ந்து தமிழக அரசு மற்றும் நாகை மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செப்டம்பா் 12-ம் தேதி விநாயகா் சிலைகளை முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்று, நாகை புதிய கடற்கரையில் விஜா்சனம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சக்தி விநாயகா் குழுவைச் சோ்ந்த 75-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக குழுவின் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். ஆதிமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com