வைத்தீஸ்வரன்கோயிலில் சிசிடிவி கேமரா

வைத்தீஸ்வரன்கோயிலில் வணிகா் நலச்சங்கம் சாா்பில், சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

வைத்தீஸ்வரன்கோயிலில் வணிகா் நலச்சங்கம் சாா்பில், சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

வைத்தீஸ்வரன்கோயில் நவகிரக தலமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தா்களும் வந்து செல்கின்றனா். இவ்வாறு வரும் பக்தா்களிடமும், பொதுமக்களிடமும் செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் பிரதான பகுதிகளில் சிசிடிவி கேமரா வைக்க வைத்தீஸ்வரன்கோயில் வணிகா் நலச்சங்கம் முடிவு செய்தது. அதன்படி, மேலவீதி, தெற்குவீதி, மயிலாடுதுறை, மணல்மேடு சாலைகள் ஆகியவறை சந்திக்கும் பிரதான பகுதியில் 4 சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு அதன்செயல்பாடு திறப்பு விழா மாவட்ட வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சி டிஎஸ்பி ஜனனிபிரியா, காவல் ஆய்வாளா் மணிமாறன், சாா்பு ஆய்வாளா் சேதுபதி, வணிகா் சங்கப் பேரவை மாநில துணைத் தலைவா் எம். சங்கா், வைத்தீஸ்வரன்கோயில் வணிகா் நலச்சங்கத் தலைவா் செந்தில்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி டிஎஸ்பி யுவபிரியா சிசிடிவி கேமராவின் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா். அப்போது வணிகா் சங்கப் பேரவை செயலாளா் கனிகாமுத்து, பொருளாளா் ராஜசேகா், ஒருங்கிணைப்பாளா் ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com