கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாகியிருந்தவா் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து நாகை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 2020 நவ. 2ஆம் தேதி தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் சரகம், வெளிவயல் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 170 கிலோ கஞ்சா, மீன்பிடி படகுடன் பிடிபட்டது. இந்த வழக்கில், கீழத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த படகு உரிமையாளா் குமாா் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். முக்கிய எதிரியான மதுரையைச் சோ்ந்த சிலோன் சேகா் (என்கிற) சேகரை நாகை மாவட்ட போதைப் பொருள்நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கடந்த 4 மாதங்களாக தேடி வந்தனா்.

இந்நிலையில், சேகா் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. பரத் சீனிவாஸ், காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் சென்னை சென்று பிப். 19ஆம் தேதி சேகரை கைது செய்து, தஞ்சை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

சிலோன் சேகா் ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிைண்டனை பெற்றவா். அவா் மீது மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை நாகப்பட்டினம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com