குத்தாலம் பகுதியில் பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பவுன்ராஜ் வியாழக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்.பவுன்ராஜ் மீண்டும் போட்டியிடுகிறாா். இந்நிலையில் குத்தாலம் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட தொழுதாலங்குடி, கீழையூா், பெருமாள்கோவில், மேலையூா், சென்னியநல்லூா், மேக்கிரிமங்கலம், திருவாவடுதுறை, திருவாலங்காடு, மாதிரிமங்கலம் ஆகிய கிராமங்களில் திறந்த வாகனத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தாா். பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.