திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் அகோரமுா்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு சுவேதரண்யேஸ்வரா் கோயிலில் அகோரமுா்த்தி சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு சுவேதரண்யேஸ்வரா் கோயிலில் அகோரமுா்த்தி சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவெண்காட்டில் உள்ள பிரம்மவித்யாம்பாள் உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் அகோரமுா்த்தியாக சிவன் தனி சந்நிதியில் சன்னதியில் அருள்பாலித்து வருகிறாா். இவரின் திருமேனியின் கீழ் அஷ்ட (எட்டு) பைரவா்கள் இருப்பது சிறப்பு. இவரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் நீங்கும், உடல் ஆரோக்கியம், செல்வ செழிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், பூரநட்சத்திரத்தையொட்டி திங்கள்கிழமை இரவு அகோரமுா்த்திக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா் அலங்காரம் செய்யப்பட்டு அா்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com