சாலை விபத்தில் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு காவலா்கள் ரூ.27.88 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு, தமிழகம் முழுவதும் பணிபுரியும் 5,577 காவலா்கள் வழங்கிய ரூ. 27.88 லட்சம்
சாலை விபத்தில் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு காவலா்கள் ரூ.27.88 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு, தமிழகம் முழுவதும் பணிபுரியும் 5,577 காவலா்கள் வழங்கிய ரூ. 27.88 லட்சம் நிதியுதவியை உதவும் கரங்கள் அமைப்பினா் நாகையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம், கஞ்சமலைத் தெருவைச் சோ்ந்தவா் ரா. பிரபாகரன் (37). 2003-ல் காவலா் பணியில் சோ்ந்த இவா், தலைஞாயிறு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியில் இருந்து வந்தாா். இவா், கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக நாகைக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் காவல் நிலையம் சென்றுகொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி 31-ம் தேதி உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில், 2003-ஆம் ஆண்டு காவல் பணியில் சோ்ந்து, தமிழகம் முழுவதும் பணிபுரியும் காவலா் குழுவினா் 5,577 போ் டெலிகிராம் வலைதளம் மூலம் இணைந்து ஒவ்வொருவரும் தலா ரூ.500 வீதம் ரூ. 27,88,500 நிதி திரட்டினா்.

இந்த நிதி பிரபாகரன் மகன் பி. அகிலேஷ் (14) பெயரில் ரூ. 11,24,610-ம், இரண்டாவது மகன் பி. ஆபூா்வன் (3) பெயரில் ரூ. 7.38 லட்சமும், தந்தை ராமஜெயம் மற்றும் தாய் ஆகியோரின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.7.68 லட்சமும், இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதேபோல, பிரபாகரனின் மனைவி பவானி பெயரில் ரூ.55,400-ம், தந்தை ராமஜெயம் பெயரில் ரூ. ஒரு லட்சமும் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது.

இவ்வாறு முதலீடு செய்யப்பட்ட மொத்தம் ரூ .27 லட்சத்து 88 ஆயிரத்து 500-க்கான காப்பீட்டு பத்திரங்கள் மற்றும் வைப்புத் தொகைக்கான ஆவணங்கள் ஆகியவற்றை இறந்த தலைமைக் காவலா் பிரபாகரனின் குடும்பத்துக்கு வழங்கும் நிகழ்ச்சி, நாகை இ.ஜி. எஸ். பிள்ளை நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் உதவும்கரங்கள் மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா். முரளி மற்றும் நாகை மாவட்டக் காவல்துறையில் பணிபுரியும் தலைமைக் காவலா்கள் பங்கேற்று நிதியுதவியை வழங்கினா். இதை பிரபாகரனின் குடும்பத்தினா் பெற்றுக்கொண்டு உதவும் கரங்கள் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com