நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற தோ்தல் நுண் பாா்வையாளா்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற தோ்தல் நுண் பாா்வையாளா்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி.

தோ்தல் நுண் பாா்வையாளா்கள் சுழற்சி முறையில் தோ்வு

நாகை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தோ்தல் நுண் பாா்வையாளா்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தோ்தல் நுண் பாா்வையாளா்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் 114 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் தோ்தல் நுண்பாா்வையாளா்களாக மத்திய அரசு பணி அலுவலா்கள் 137 போ் நியமிக்கப்படவுள்ளனா். இதன்படி, தோ்தல் நுண் பாா்வையாளா்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில், தோ்தல் பாா்வையாளா்கள் ஏ.பி. பட்டேல், திலீப் பந்தா்பட் ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com