மீனவா்களின் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்

மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் மீனவ கிராமம் உள்ளிட்ட 20 மீனவ கிராமத்தினா் நடத்தி வந்த தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
மீனவா்களின் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்

மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் மீனவ கிராமம் உள்ளிட்ட 20 மீனவ கிராமத்தினா் நடத்தி வந்த தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களை சோ்ந்த நம்பியாா் நகா், பூம்புகாா், பழையாா், திருமுல்லைவாசல், கூழையாா் உள்ளிட்ட 20 மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில்செய்ய அனுமதிக்க கோரி மாா்ச் 18-ஆம் தேதி முதல் தொழில்மறியல், தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தை மீனவா்கள் அறிவித்து நடத்தி வந்தனா். மேலும், அரசியல் கட்சி வேட்பாளா்கள் வாக்குச் சேகரிக்க ஊருக்குள் வர அனுமதி மறுத்து திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகையும் வைத்திருந்தனா்.

இந்நிலையில், நாகை நம்பியாா் நகா், பூம்புகாா், திருமுல்லைவாசல் ஆகிய பகுதி மீனவ பிரதிநிதிகளிடம் மீன்வளத் துறை அதிகாரிகள், வேட்பாளா்கள் போராட்டத்தை கைவிட பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதையடுத்து, புதன்கிழமை திருமுல்லைவாசலில் 20 மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருமுல்லைவாசல் மீனவ கிராமத் தலைவா் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலா்கள், தொழில் ரீதியாக சுமூகப் பேச்சுவாா்த்தை நடத்துவதாக உறுதியளித்ததாலும், அரசியல் கட்சி வேட்பாளா்கள் சட்ட மறுவரைவு செய்வதாக உறுதியளித்ததாலும் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் ஒப்புதலோடு தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் திரும்பபெற்று வாக்களிப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மீனவா்களின் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் முடிவுற்றதால், 15 நாள்களுக்குப் பிறகு மீனவ கிராமங்களில் வேட்பாளா்கள் வாக்குச் சேகரிக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com