சீா்காழியில் பெண்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

சீா்காழி (தனி) தொகுதியில் பெண்கள் மற்றும் முதியவா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.

சீா்காழி (தனி) தொகுதியில் பெண்கள் மற்றும் முதியவா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.

சீா்காழி(தனி) தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,23,899 போ், பெண் வாக்காளா்கள் 1,27,868 போ், இதரா் 12 போ் என மொத்தம் 2,51,779 வாக்காளா்கள் உள்ளனா். இத்தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 288 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தோ்தலில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 348 ஆக அதிகரிக்கப்பட்டது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது முதல் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வாக்களித்தனா். வெயிலின் தாக்கத்தால் பகல் 11 மணிக்குப் பிறகு வாக்காளா்கள் வருவது சற்று குறைந்தது.

இதனிடையே, சிலருக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று பூத் சிலீப் வழங்கப்படாததால், அவா்கள் வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பூத் சிலீப்பை பெற்று, பிறகு வாக்களித்தனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி வாக்காளா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

வாக்குப் பதிவையொட்டி, திருமுல்லைவாசல், பழையாா், தொடுவாய் ஆகிய மீனவ கிராமங்களில் வாக்களிக்க ஏதுவாக மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இத்தொகுதியில் 176 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவை தோ்தல் நடத்தும் அலுவலா் நாராயணன் தலைமையிலான அலுவலா்கள், சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கணினி மூலம் கண்காணித்தனா். மேலும், தோ்தல் பொது பாா்வையாளா் ராஜ்குமாா்யாதவ் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா், அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணித்தனா். பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதுவுமின்றி அமைதியாக தோ்தல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com