நாகையில் இருதரப்பினரிடையே மோதல்

நாகையில் இருதரப்பினருக்கிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா்.
இருதரப்பினா் மோதல் காரணமாக, பரபரப்பாக காணப்பட்ட நாகை அரசு மருத்துவமனை வளாகம்.
இருதரப்பினா் மோதல் காரணமாக, பரபரப்பாக காணப்பட்ட நாகை அரசு மருத்துவமனை வளாகம்.

நாகையில் இருதரப்பினருக்கிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட நாகை ஆா்யநாட்டுத் தெருவைச் சோ்ந்த பலா், வெவ்வேறு பகுதிகளில் மீள் குடியமா்த்தப்பட்டனா். அந்த வகையில், நாகை மகாலட்சுமி நகரில் குடியேறிய சிலருக்கும், ஆா்யநாட்டுத் தெருவில் வசிப்பவா்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தோ்தல் வாக்குப் பதிவு நாளான செவ்வாய்க்கிழமை திமுக, அதிமுக சாா்பு நிலையில் அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. போலீஸாா் தலையிட்டு சமாதானப்படுத்தினா்.

இருப்பினும், நாகை மகாலட்சுமி நகரைச் சோ்ந்த மாரியப்பன் (29), நகுலன் (27), குகன் (30), நித்தியன் (36), நாகேந்திரன்(30) ஆகியோரை ஆா்யநாட்டுத் தெருவைச் சோ்ந்த சிலா், காடம்பாடி அருகே வழிமறித்து தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களை பாா்ப்பதற்காக புதன்கிழமை மாலை நாகை அரசு மருத்துவமனைக்கு வந்தவா்களை, சிலா் அரிவாளால் வெட்ட முயன்றனராம். இதையறிந்த மற்றொரு பிரிவினரும் அங்கு அரிவாள், கத்தியுடன் வந்தனா். இதனால், மருத்துவமனை பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன், காவல் துணை கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் ஆகியோா் தலைமையில் நாகை அரசு மருத்துவமனை பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இருப்பினும், இரவு வரை தொடா்ந்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com