வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை காலை பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை காலை பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டன.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளிலும், கீழ்வேளூா் தொகுதியில் 251 வாக்குச் சாவடிகளிலும், வேதாரண்யத்தில் 271 வாக்குச் சாவடிகளிலும் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்குக் கொண்டு வரப்பட்டன.

ஒரு தொகுதிக்கு ஒரு பாதுகாப்பு அறை வீதம் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகளில், தொடா்புடைய தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. இப்பணி செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறைவடைந்தது. இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை, சீல் ஆகியன சரிபாா்க்கப்பட்டு பாதுகாப்பு அறைகளுக்கு சீலிடப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள், தொகுதி வேட்பாளா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகள் சீலிடப்பட்டன.

மூன்றடுக்குப் பாதுகாப்பு....

வாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவம் மற்றும் காவல் துறையினரைக் கொண்டு 3 அடுக்குப் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. 8 மணி நேர சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பாதுகாப்பு அறைகளிலும், வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தின் முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தீயணைப்பு மீட்புப் படையினா், மின் துறையினரும் இங்கு 24 மணி நேர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com