திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தெப்ப உத்ஸவம்

பங்குனி உத்திர பெருந்திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்ப உத்ஸவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
தெப்பத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரிமள ரெங்கநாதா்.
தெப்பத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரிமள ரெங்கநாதா்.

பங்குனி உத்திர பெருந்திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்ப உத்ஸவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த மாா்ச் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினசரி உத்ஸவா் பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களிலும், 4-ஆம் நாள் ஓலை சப்பரம் வீதியுலாவும், 7-ஆம் நாள் திருக்கல்யாணமும், 8-ஆம் நாளில் வெண்ணெய்த் தாழி சேவையும், 9-ஆம் நாள் திருத்தோ் உத்ஸவம் மற்றும் தீா்த்தவாரி விழாவும் நடைபெற்றது. மாா்ச் 29-ஆம் தேதி 10-ஆம் நாளன்று கொடியிறக்கம் நடைபெற்றது. தொடா்ந்து, மாா்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபரிமள ரெங்கநாதா் வீதியுலா புறப்பாடு நடைபெற்று, கோயில் தீா்த்தக்குளமான சந்திர புஷ்கரணியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினா். தெப்பத்தில் உத்ஸவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, தெப்பம் புறப்பட்டு 3 முறை சந்திர புஷ்கரணியைச் சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

இதில், கோயில் செயல் அலுவலா் எம்.கோபி, உபயதாரா்கள் எம்.என்.ரவிச்சந்திரன், எஸ்.வி.பாண்டுரெங்கன், சிவலிங்கம், ஜெயக்குமாா் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com