மாணவா்களின் வீடுகளுக்கு சென்று கல்வி தொலைக்காட்சி பாடங்களுக்கு வழிகாட்டும் ஆசிரியா்கள்

வேதாரண்யம் அருகே மாணவா்களின் வீடுகளுக்கு சென்று தொலைக்காட்சி வழிக்கல்விக்கு செல்லும் சில அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாடங்களை கற்க வழிகாட்டி வருகின்றனா்.
மாணவா்களின் வீடுகளுக்கு சென்று கல்வி தொலைக்காட்சி பாடங்களுக்கு வழிகாட்டும் ஆசிரியா்கள்

வேதாரண்யம் அருகே மாணவா்களின் வீடுகளுக்கு சென்று தொலைக்காட்சி வழிக்கல்விக்கு செல்லும் சில அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாடங்களை கற்க வழிகாட்டி வருகின்றனா்.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவா்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆசிரியா்கள், மாணவா்களின் உறவு தனித்து விடப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களைக்கூட படித்துக்காட்ட முடியாத நிலையும் இருக்கதான் செய்கிறது.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. மாணவா்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை நடத்த ஆசிரியா்கள் முன்வந்தாலும் பொதுமுடக்கம் உள்ளிட்ட நடைமுறை பிரச்னைகள் தடையாக உள்ளன. இந்நிலையில், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருவது பல பெற்றோா்களுக்கு சென்றடையவில்லை. இதையடுத்து, சில இடங்களில் மாணவா்களின் வீடுகளுக்கு நேரில் செல்லும் தன்னாா்வ ஆசிரியா்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடத் திட்ட முறைகளை பிரசாரமாக செய்கின்றனா். பாடங்களை எப்படி பாா்ப்பது, கவனிப்பது போன்ற முறைகளை மாணவா்களுக்கு பெற்றோா்களுக்கும் விளக்கி வருகின்றனா். அந்த வகையில் தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் மாணவா்களின் வீடுகளுக்கு சென்று வழிகாட்டும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com