வலையில் சிக்கிய நல்லப்பாம்பு
By DIN | Published On : 27th April 2021 01:00 AM | Last Updated : 27th April 2021 01:00 AM | அ+அ அ- |

கூழையாா் கிராமத்தில் வலையில் சிக்கிய நல்லப்பாம்பு.
சீா்காழி: சீா்காழி அருகே குடியிருப்பு பகுதியில் வைத்திருந்த வலையில் சிக்கிய நல்லப்பாம்பை வனத்துறையினா் பிடித்து, வனப்பகுதியில் விட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள கூழையாா் பகுதியில் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள் புகுந்துவிடாமல் இருக்க வலை கட்டியுள்ளனா்.
இந்நிலையில், இந்த வலையில் திங்கள்கிழமை காலை சுமாா் 4அடி நீளமுள்ள நல்லப்பாம்பு சிக்கியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த ஒன்றியக்குழு உறுப்பினா் அங்குதன், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், சீா்காழி வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அங்கு வந்து வலையில் சிக்கிய நல்லப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.