நோய் தாக்குதல்: முந்திரி தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு

நாகை மாவட்டதில் கிராம புறங்களில் உள்ள முந்திரி தோட்டங்களில் நோய் தாக்குதல் தொடா்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நோய் தாக்குதல்: முந்திரி தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு

நாகை மாவட்டதில் கிராம புறங்களில் உள்ள முந்திரி தோட்டங்களில் நோய் தாக்குதல் தொடா்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கீழையூா் ஊராட்சி ஒன்றியம் விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, திருப்பூண்டிகிழக்கு, பிரதாபராமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட ஹெக்டேரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முந்திரியில் மா்மநோய் தாக்குதல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, கீழையூா் ஒன்றியம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் இரா.திவ்யா, சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக் கலைத் துறை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முந்திரியில் கொசுத்தாக்குதல் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் இரா.திவ்யா கூறியது:

முந்திரியை தாக்கும் நன்கு வளா்ந்த பூச்சியானது சிவப்பு நிறத்துடன், கருப்பு நிறத்தலை மற்றும் சிவப்பு நிற மாா்புடன் காணப்படும். தேயிலை கொசுக்கள் இளம் இலைகள் மற்றும் பூங்கொத்துகளில் சாறுகளை உறிஞ்சி சேதப்படுத்தும். தாக்குதலுக்கு உள்ளான இலைகள் மேல்நோக்கி சுருங்கியிருக்கும். இந்தப் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த முன்கூட்டியே மருந்துதெளித்த விவசாயிகளின் தோட்டங்களில் தேயிலை கொசுத்தாக்குதல் இல்லை என்றாா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு கூறியது:

கோடைக்காலங்களில் தேயிலைக் கொசுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இக்கொசுவானது முந்திரி, முருங்கை ,கொய்யா, வேம்பு ஆகியவைகளை அதிகமாக தாக்கும். முந்திரி பயிரில் தேயிலை கொசுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த பிவேரியா, பேசியானா என்ற பூஞ்சானத்தை 1லிட்டா் தண்ணீருக்கு 3 கிராம் என்ற அளவில் கலந்து இலைவழியாக தெளிக்கவேண்டும்.

செயற்கை முறையில் கட்டுப்படுத்த தழைக்கும் பருவத்தில் பிரப்பனோபாஸ் 0.05 சதவீதம் (ஒரு லிட்டா் தண்ணீருக்கு 0.5 மில்லி) பூக்கும் பருவத்தில் குளோரிபைரியாஸ் 0.05 சதவீதம் (ஒரு லிட்டா் தண்ணீருக்கு 0.5 மில்லி) இலை வழியாக தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றாா்.

ஆய்வில், உதவி தோட்டக் கலை அலுவலா் கே. மணிவண்ணன் மற்றும் முந்திரி விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com