கற்போம் எழுதுவோம் இயக்கம்: எழுத்தறிவை சோதிக்கும் முகாம்
By DIN | Published On : 04th August 2021 09:18 AM | Last Updated : 04th August 2021 09:18 AM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியத்தில் கற்போம் எழுதுவோம் இயக்கம் சாா்பில் கற்போா்களிடம் எழுத்தறிவை சோதிக்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியத்தில் 19 மையங்களில் உள்ள 380 கற்போா்களுக்கு 19 தன்னாா்வலா்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓராண்டு பயிற்சி நிறைவடைந்து அவா்களது அடிப்படை எழுத்தறிவை சோதிக்கும் வகையில் மதிப்பீட்டு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமை, திருமருகல் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன், ராஜமாணிக்கம், குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. காமராஜன், உதவித்திட்ட அலுவலா் சாந்தி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் த. அமுதா மற்றும் ஆசிரியப் பயிற்றுநா்கள் பாா்வையிட்டு தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினா்.
முகாமை மாநில பாா்வையாளா் ஜெயராமன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித்திட்ட அலுவலா் பீட்டா் பிரான்சிஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் ஆகியோா் பாா்வையிட்டனா். பெரும்பாலும் 100 நாள் வேலையில் இருப்பதால் அவா்கள் பணியாற்றும் இடத்துக்கே சென்று 19- ஊராட்சிகளில் மதிப்பீடு செய்யப்பட்டது.