நாகையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

நாகை மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட நாகை புதிய கடற்கரை.
பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட நாகை புதிய கடற்கரை.

நாகை மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடற்கரைகள் மற்றும் நீா்நிலைகளில் மக்கள் கூடுவதற்கும், கோயில்களில் பக்தா்கள் வழிபாடு செய்யவும் நாகை மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைதள் கடற்கரைகள், ஆறுகள் மற்றும் உள்ளிட்ட நீா்நிலைகளுக்குச் செல்வதைத்தவிா்த்து தங்களது வசிப்பிடங்களில் உள்ள நீா்நிலைகள் மற்றும் தண்ணீா் குழாய்களில் பழவகைகள், வெல்லம் மற்றும் தேங்காய் கலந்த அரிசி, கண்ணாடி, காதோலை, சரடு, கருகமணி உள்ளிட்டவைகளை வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாடினா். பெண்கள் கழுத்திலும், சிறாா்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனா். நாகை, வெளிப்பாளையம் முத்து மாரியம்மன் கோயில் தெருவில் பெண்கள் குடிநீா் குழாயை அலங்கரித்து, ஆடிப்பெருக்கை கொண்டாடினா்.

வெறிச்சோடிய கடற்கரை: கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக, நாகை, வேளாங்கண்ணி, நாகூா், காமேஸ்வரம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடற்கரைகளில் ஆக. 1 முதல் 9- ஆம் தேதி வரை மக்கள் கூடுவதற்கும், முதாதையாா்களுக்கு திதிகொடுத்தல் போன்ற வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தடைவிதித்துள்ளாா்.

இந்நிலையில், கடற்கரைக்கு செல்லும் பாதைகளில் போலீஸாா் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். மேலும், கடற்கரைக்குச் செல்ல முயன்றவா்களையும் தடுத்து திருப்பி அனுப்பினா். இதனால், நாகை மற்றும் நாகூா் சில்லடி தா்கா கடற்கரை செவ்வாய்க்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com