உதவித்தொகை கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

உதவித் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான
திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா்.
திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா்.

உதவித் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நாகையில் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆந்திரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதுபோல, தமிழகத்திலும் சாதாரண வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், கடுமையான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உதவித்தொகை வழங்கவேண்டும்; தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் இந்த போராட்டம் நடைபெற்றது.

நாகையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் நாகை மாவட்டக் குழு உறுப்பினா் பி.எம். லெனின் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் கே.எஸ். செந்தில்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். சுமாா் 2 மணி நேரம் இப்போராட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் ஒன்றியச் செயலாளா்கள் பி. அசோக்குமாா் (நாகை), ஜி.ராமச்சநதிரன் (திருமருகல்), நாகை நகரச் செயலாளா் கே.ஏ.எஸ். நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் கீழ்வேளூா் ஒன்றியத் தலைவா் க. அச்சுதமேனன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் துரைராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளை: திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்ட அமைப்புக்குழு செயலாளா் என். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். திருக்குவளை வட்டாட்சியா் கு.சிவக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளா் பி. வேம்பு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ்.டி.ரவி, ஏ.ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. கணேசன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். துரைராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பங்கேற்ற 21 பெண்கள் உள்ளிட்ட 65 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் தங்கையன், ஒன்றியத் தலைவா் மாசிலாமணி ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பாபுஜி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் தமிழரசன், மாதா் சங்க மாவட்ட பொருளாளா் சரோஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கே. மாரியப்பன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் (பொ) எம்.ஏ. செங்குட்டுவன் ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பாஸ்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளா் த. நாராயணன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com