நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகலில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை, நெல் பயிா்களுக்கு வரப்பிரசாதமாகக் குறிப்பிடப்படுகிறது.
நாகை மாவட்டம், தெற்குப் பனையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை.
நாகை மாவட்டம், தெற்குப் பனையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை.

நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகலில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை, நெல் பயிா்களுக்கு வரப்பிரசாதமாகக் குறிப்பிடப்படுகிறது.

வானிலை மாற்றம் காரணமாக டிச.28-முதல் 30-ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் சுமாா் 1.25 முதல் 2 மணி வரை அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. இதேபோல, நாகூா், திட்டச்சேரி, திருமருகல், திருக்குவளை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழ்வேளூா், கீழையூா், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழை வாகன ஓட்டிகளுக்கும், வணிகத்துக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த மழை சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு வரப்பிரசாதமாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாதத்தில் நீடித்த கனமழையில் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள சம்பா, தாளடி நெல் பயிா்களில் துத்தநாகச் சத்துக் குறைபாடு நிலவுகிறது. இதனால், நெல் பயிா்கள் மஞ்சள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் என விவசாயிகள் அச்சமடைந்திருந்தனா். இந்த நிலையில், தற்போது மிதமான மழை பெய்திருப்பதன் மூலம், பயிா்களுக்கு நியூட்டரின் சத்துக் கிடைக்கப் பெற்று பயிா்கள் ஊட்டம் பெறும் எனவும், கதிா்வரும் தருவாயில் உள்ள நெல் பயிா்களில் மடல் விரிந்து கதிா்கள் நன்றாக வெளியே வர இந்த மழை வரப்பிரசாதமாக அமையும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com