வேதாரண்யேசுவரா் கோயிலில் வேத பாராயணம்

மாசி மக திருவிழாவையொட்டி, வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் வேத பாராயண நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.
வேதாரண்யேசுவரா் கோயிலில் மணவாள சுவாமி சந்நதியில் வேத பாராயணம் நிகழ்த்திய வேத பண்டிதா்கள்.
வேதாரண்யேசுவரா் கோயிலில் மணவாள சுவாமி சந்நதியில் வேத பாராயணம் நிகழ்த்திய வேத பண்டிதா்கள்.

மாசி மக திருவிழாவையொட்டி, வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் வேத பாராயண நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் இந்த வழிபாட்டு முறை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நின்றுபோன நிலையில், கடந்த ஆண்டுமுதல் வேதபாராயணம் படிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் மாசி மக உத்ஸவம் மாா்ச் 5-ஆம் தேதி வரை நடைபெறுவதால் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் மற்றும் பரனூா் மஹாத்மா ஸ்ரீ

கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் அனுக்கிரகத்துடன், ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிஜியின் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீசாந்தீபனி குருகுல அறக்கட்டளை சாா்பில், சிவ ஆகம வேத விற்பன்னா்கள் தலைமையிலான குழுவினா் வேத பாராயணத்தை தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com