நாகையில் மாவட்ட இளையோா் கபடி அணி வீரா்கள் தோ்வு
By DIN | Published On : 13th February 2021 08:24 AM | Last Updated : 13th February 2021 08:24 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் இளையோா் கபடி அணிக்கான வீரா்கள் தோ்வு, நாகையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.
பிப்ரவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மாநில இளையோா் கபடி போட்டியில், நாகை மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில் பங்கேற்கும் அணியின் வீரா்கள் தோ்வு, நாகை, கீச்சாங்குப்பம் சேவாபாரதி விளையாட்டு மைதானத்தில் காலை 8. 30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. இதில் பங்கேற்போா் 2001-ஆம் ஆண்டு மாா்ச் 30-ஆம் தேதிக்குப் பின்னா் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். உடல் எடை 70 கிலோவுக்கு உள்பட்டிருக்க வேண்டும். ஆதாா் அட்டை, பாஸ்போா்ட், எஸ்.எஸ்.எல்.சி அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்று ஆகிய ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலை கொண்டு வர வேண்டும்.