சிங்காரவேலா் பிறந்தநாள் கொண்டாட்டம்

திருவெண்காடு அருகேயுள்ள நாயக்கா்குப்பம் மீனவ கிராமத்தில் சுதந்திரப் போரட்ட தியாகியும், பொதுவுடமை இயக்கத் தலைவரும் சிந்தனை சிற்பி என அழைக்கப்படும் சிங்காரவேலா் பிறந்தநாள் கொண்டாடபட்டது.
தியாகி சிங்காரவேலவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.

இதையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சித் தலைவருமான சசிக்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் தமிழறிஞா் முத்துகுரு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தன், கிராம பஞ்சாயத்தாா்கள் திரளான மீனவ பொதுமக்கள் பங்கேற்றனா். இதேபோல், அதிமுக சாா்பில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் முத்து தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com