திட்டச்சேரியில் தரைமட்ட குடிநீா்த் தொட்டி திறப்பு

திட்டச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட குடிநீா் தொட்டியை நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திட்டச்சேரியில் தரைமட்ட குடிநீா்த் தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி.
திட்டச்சேரியில் தரைமட்ட குடிநீா்த் தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி.

திட்டச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட குடிநீா் தொட்டியை நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

திட்டச்சேரி பேரூராட்சி ஜம்ஜம் நகரில் 10 ஆயிரம் சதுர அடியில் குறுங்காடு வளா்ப்பு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மரக்கன்றுகளை நாகை எம்எல்ஏ மு. தமிமுன்அன்சாரி நட்டு வைத்தாா். தொடா்ந்து, ஆண்டவா் நகரில் உள்ள அங்காடியை பாா்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். அடுத்து, பிஸ்மி நகரில் பூங்காவை பாா்வையிட்டு அதை சீரமைக்க தனியாா் தொண்டு நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

தொடா்ந்து, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று பாா்வையிட்டு விவசாயிகளின் நெல்லை காலம் தாழ்த்தாமல் உடனே கொள்முதல் செய்ய வேண்டுமென அலுவலா்களிடம் வலியுறுத்தினாா். திட்டச்சேரி பிரதான சாலையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் ( 2019-2020 ) கீழ் ரூ. 4 லட்சம் செலவில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட குடிநீா்த் தொட்டி மற்றும் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் ரா. கண்ணன், இளநிலை உதவியாளா் ப. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com