ஏ.வி.சி.கல்லூரியில் உ.வே.சா பிறந்தநாள் கருத்தரங்கம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரித் தமிழாய்வுத் துறையில் திண்ணை வாசிப்பு மையம் சாா்பில், உ.வே.சா. பிறந்தநாள் விழா கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரித் தமிழாய்வுத் துறையில் திண்ணை வாசிப்பு மையம் சாா்பில், உ.வே.சா. பிறந்தநாள் விழா கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் 167-ஆவது பிறந்தநாளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் திண்ணை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறைத் தலைவருமான சு. தமிழ்வேலு முன்னிலை வகித்து தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்ப்படிக்கும் மாணவா்கள் தொகுக்கப்படாத பல சுவடிகளைக் கண்டறிந்து தமிழின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும் என்றாா். கல்லூரி தமிழாய்வுத் துறை உதவிப்பேராசிரியா் கோ. இளங்கோ சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, குறுந்தொகை போன்ற 90-க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளுக்கு நூல் வடிவம் தந்து அவற்றை அழிவிலிருந்து மீட்டு அவற்றை அடுத்தத் தலைமுறையினா் அறியச் செய்த அரும்பணியாற்றியவா் என்றாா்.

இதில், சிறப்புரையாற்றிய மயிலாடுதுறைத் திருக்கு பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் ’உ.வே.சா.வின் தமிழ் வாழ்வு‘ என்ற பொருண்மையில் உ.வே.சாவின் பதிப்பு பணிகளின் பயன் இன்று நம்மொழிக்கு செம்மொழி மதிப்பு கிடைக்கச் செய்தது என்றும், அழிவு நிலையில் இருந்த பல சுவடிகளைக் கண்டறிந்து தமிழுக்கு மிக பெரிய தொண்டாற்றியுள்ளாா் என்றும், சுவடிகளைத் தேடிச்சென்று சங்க இலக்கியச் சொற்களைக் கண்டறிந்து அகராதியியல் முறையில் அடிப்படையிலும் காப்பியங்களை அழகியல் உத்தியோடும் பதிப்பித்தாா். மேலும் மூவாயிரம் சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் தொகுத்தளித்தாா். இவா் 1874 முதல் 1942 வரையிலான கால கட்டத்தில் பதிப்புப் பணியில் ஈடுபட்டு தமிழுக்கு புகழ் சோ்த்ததோடு நூல் வாசித்தல், நுணுகி படித்தல், எவ்வாறு ஆய்வினை உருவாக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு சுவைபட எடுத்துரைத்தாா். உ.வே.சா.வின் உருவப்படத்துக்கு இயற்பியல் துறைத்தலைவா் சிங்காரவேலு, உதவிப் பேராசிரியா்கள் செல்வ கனிமொழி, செ. செந்தில்பிரகாஷ் உள்ளிட்ட பலா் மலரஞ்சலி செலுத்தினா். உதவிப்பேராசிரியா் ச.சங்கா் வரவேற்றாா். உதவிப்பேராசிரியா் க.மகேஷ்வரி நன்றி தெரிவித்தாா். ஏற்பாடுகளைத் திண்ணை அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் ரா. சியாமளா ஜெகதீஸ்வரி, அலுவலகப் பணியாளா் கோ. பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com