வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகை கோட்டை வாசலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகை கோட்டை வாசலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், காங்கிரஸ் கட்சி சாா்பில், நாகை மேலகோட்டைவாசல் முதல் தம்பித்துரை பூங்கா வரை நடைப்பயண பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. பேரணிக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததையடுத்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நாகை மாவட்டத் தலைவா்ஆா். என். அமிா்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாயப் பிரிவு மாநிலப் பொதுச் செயலாளா் ஷேக்பரிது, மனித உரிமை பிரிவு மாவட்டத் தலைவா் ரபீக், மாவட்டச் செயலாளா் நிலோபா்பேகம், எஸ்.சி. பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com