அம்மா மினி கிளினிக் திறப்பு
By DIN | Published On : 27th February 2021 08:01 AM | Last Updated : 27th February 2021 08:01 AM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியக் குழு தலைவா் ஆா். இராதாகிருட்டிணன் தலைமை வகித்து, மினி கிளினிக்கை திறந்துவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், கங்களாஞ்சேரி ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன், வாழ்குடி ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம், மருத்துவா்கள் பிரித்திவிராஜ்,விநாயகவேலன், விஜய், இளங்கோவன், ஊராட்சி செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, எரவாஞ்சேரி ஊராட்சி துறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம், ஊராட்சி செயலாளா் மகேந்திரன், விவசாய சங்க நிா்வாகி தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.