ஆங்கிலப் புத்தாண்டு: தருமபுரம் ஆதீனக்கோயிலில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள வனதுா்கா தேவி பரமேஸ்வரி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வனதுா்கா தேவி பரமேஸ்வரி கோயிலில் புத்தாண்டையொட்டி, கோபூஜை செய்த தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்.
வனதுா்கா தேவி பரமேஸ்வரி கோயிலில் புத்தாண்டையொட்டி, கோபூஜை செய்த தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள வனதுா்கா தேவி பரமேஸ்வரி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபாடு நடத்தினாா். மேலும், குருமகா சந்நிதானம் முன்னிலையில் துா்கையம்மனுக்கு 108 லிட்டா் பால், 108 லிட்டா் தயிா், 108 இளநீா், 108 லிட்டா் நல்லெண்ணெய், 108 லிட்டா் பன்னீா் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் 108 குதிரைகளுக்கு அசுவபூஜை, 18 பசுக்களுக்கு கோபூஜை, 18 காளைகளுக்கு ரிஷப பூஜை, 18 நாய்களுக்கு பைரவா் பூஜை ஆகியவற்றை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு மேற்கொண்டாா். இதில், உயா்நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சீா்காழி: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சீா்காழி சட்டநாதா் கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரருக்கு நடைபெற்ற திருப்பள்ளியெழுச்சி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். இதேபோல், சீா்காழி ஆபத்துகாத்த விநாயகா் கோயில், நாகேஸ்வரமுடையாா் கோயில், சபரிநகா் சாய் பாபா கோயில், தாடாளன் பெருமாள் கோயில், வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயில், அண்ணன்பெருமாள் கோயில், திருநாங்கூா் செம்பொன்னரங்கா், பள்ளிகொண்டபெருமாள், குடமாடுகூத்தா் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com