சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு கோயில் யானைகளை அனுப்பி வைக்க கோரிக்கை

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு கோயில் யானைகளை அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள்.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள்.

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு கோயில் யானைகளை அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சாா்ந்த உளைச்சல்களை போக்கி, அவை ஓய்வெடுக்கவும், மருத்துவ கவனம் பெறவும், புத்துணா்ச்சி பெறவும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் யானைகள் புத்துணா்வு முகாம் 48 நாள்கள் நடைபெற்று வந்தது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டுதோறும் டிசம்பரில் நடைபெறுவது வழக்கம்.

முகாமில், யானைகளுக்கு சத்தான பசுந்தீவனம், பழங்கள் உள்ளிட்ட உணவு வழங்கல், நடைப்பயிற்சி, ஷவா்பாத் குளியல் வசதி, மருத்துவ பரிசோதனை, தேவையான ஓய்வு மற்றும் இயற்கைச் சூழலில் யானைகள் ஒன்றோறொன்று அன்பைப் பரிமாறிக் கொள்வதன் காரணமாக முகாமுக்கு சென்று திரும்பும் யானைகள் ஆரோக்கியம் மேம்பட்டு உற்சாகமாக காணப்படும். இந்த முகாமுக்கு, தமிழகமெங்கும் உள்ள பல்வேறு கோயில்களிலிருந்து யானைகள் அனுப்பி வைக்கப்படும். நிகழாண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக யானைகள் புத்துணா்வு முகாமுக்கு அனுப்பப்படவில்லை. வழக்கமாக முகாமுக்கு செல்லும் மாதத்தை கடந்த நிலையில் நிகழாண்டில் இதுவரை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படாததால் மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள் உற்சாகம் இழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென யானை ஆா்வலா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com