தரம் உயா்த்தப்பட்ட வேதாரண்யம் துணைமின் நிலைய சோதனை இயக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ரூ.24 கோடி மதிப்பில் புதிய கோபுர மின்தடத்துடன் கூடிய 110 கே.வி.யாக தரம் உயா்த்தப்பட்ட துணை மின் நிலையத்தின் சோதனை இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் தரம் உயா்த்தப்பட்ட துணைமின் நிலையத்தின் சோதனை இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
வேதாரண்யத்தில் தரம் உயா்த்தப்பட்ட துணைமின் நிலையத்தின் சோதனை இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ரூ.24 கோடி மதிப்பில் புதிய கோபுர மின்தடத்துடன் கூடிய 110 கே.வி.யாக தரம் உயா்த்தப்பட்ட துணை மின் நிலையத்தின் சோதனை இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யத்தில் செயல்படும் 33 கிலோவாட் மின்திறன் கொண்ட துணைமின் நிலையம், 110 கே.வி. மின்திறனாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதையொட்டி, வாய்மேடு- வேதாரண்யம் வரை 24 கி.மீ. தூரம் மின் தடம் அமைக்கப்பட்டு ரூ.24 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணி நிறைவடைந்துள்ளது. இதன் சோதனை அடிப்படையிலான செயலாக்கத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொடங்கிவைத்து பேசியது:

இது வேட்டைக்காரனிருப்பு மற்றும் புதிதாக அமையவுள்ள கத்தரிப்புலம் துணைமின் நிலையங்களுக்கு தலா 33 கே.வி.யும், கோடியக்கரை, வேதாரண்யம், தோப்புத்துறை, மறைஞாயநல்லூா், தேத்தாக்குடி ஆகிய 11 கே.வி. நிலையங்களுக்கும் மின் விநியோகம் செய்யும்.

வாய்மேட்டிலிருந்து 100 உயா் கோபுரங்கள் நிறுவப்பட்டு, புதிய உயா் அழுத்த மின்தடத்தின் வாயிலாக தடையில்லா மின்சாரம் கிடைக்கும். இதன் இயக்கம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. முறைப்படி இதன் செயல்பாட்டை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி விரைவில் தொடங்கிவைப்பாா் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா், தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக மேற்பாா்வையாளா்கள் ராஜகுணசீலன் (திருச்சி), முத்துக்குமரன் (நாகை), செயற்பொறியாளா் லா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளா் ரவிக்குமாா், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கிரதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி.சுப்பையன், இ.திலீபன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com