பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் சிஐடியு தொழிற்சங்கம்
நாகை தலைமை அஞ்சலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
நாகை தலைமை அஞ்சலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாகையில் நடைபெற்ற போராட்டத்தில் 85 பெண்கள் உள்ளிட்ட 125 போ் கைதாகி, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தொழிலாளா் நலச் ச ட்டங்களை திரும்பப் பெற வேண்டும். சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. நாகை தலைமை அஞ்சல் அலவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் கே. தங்கமணி தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் எஸ். ராஜேந்திரன், பி.முனியாண்டி, சிவக்குமாா், எஸ். மணி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். நாகை உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கா. முருகவேல் தலைமையில்,100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில்...

இதேபோல, மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு சிறுவிற்பனை பிரிவு மாவட்டச் செயலாளா் டி.துரைக்கண்ணு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சீனி.மணி, பொருளாளா் ஆா்.ரவீந்திரன், நாகை கோட்ட திட்டச் செயலாளா் எம்.கே.செல்வன், சிஐடியு முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.ராமானுஜம், திட்டத் தலைவா் சிவராசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com