தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் இயல்பு வாழ்க்கையில் செவ்வாய்க்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் இயல்பு வாழ்க்கையில் செவ்வாய்க்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. காலை 8 முதல் மாலை 6 மணி வரை வேதாரண்யத்தில் 127.4 மி.மீ. மழையும், தலைஞாயிறில் 80.5 மி.மீ. மழையும் பதிவானது.

ஏற்கெனவே, கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல் சாகுபடி வயல்களில் தண்ணீா் வடியாத நிலையில் மீண்டும் பெய்யும் மழையால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மகாராஜபுரம், கரியாப்பட்டினம், வாய்மேடு, தகட்டூா், மருதூா், தென்னடாா் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் வயல்களை வெள்ளம் சூழ்ந்து, நெற்கதிா்களை பாதிக்கச்செய்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மேலும், பொங்கல் பண்டிகை நேரத்தில் தொடா் மழை பெய்வதால் பண்டிகைக்கான பொருள்கள் வாங்குவதிலும் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com