கிராம மக்கள் சாலை மறியல்

திருமருகல் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருமருகல் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் இருந்து விழிதியூா் வழியாக பூந்தோட்டம்- திருநள்ளாறு செல்லும் சாலையை சேஷமூலை, சியாத்தமங்கை, விழிதியூா், கணபதிபுரம், மானாம்பேட்டை, விஸ்வநாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த சாலையில் விஸ்வநாதபுரம்-விழிதியூா் இடையே அம்பகரத்தூா் குறுக்குச்சாலை இணையும் இடத்தில் சுமாா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் சம்பவம் அடிக்கடி நேரிடுகிறது.

இந்த சாலையை சீரமைக்கக் கோரி, காரைக்கால் - பூந்தோட்டம் சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் க. அன்பரசன் , திருமருகல் வருவாய் ஆய்வாளா் பூங்குழலி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com