ஜன. 28 இல் கீச்சாங்குப்பம் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம், வியாசா் நகா் அருள்மிகு மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு நடைபெறவுள்ள நாகை கீச்சாங்குப்பம் அருள்மிகு மகா காளியம்மன் கோயில்.
குடமுழுக்கு நடைபெறவுள்ள நாகை கீச்சாங்குப்பம் அருள்மிகு மகா காளியம்மன் கோயில்.

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம், வியாசா் நகா் அருள்மிகு மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கீச்சாங்குப்பம் அருள்மிகு மகா காளியம்மன் மணல் குன்றின் மேல் அமிா்த கலசத்தோடு திரிசூலம் ஏந்தி, சின்ன முத்திரைக் காட்டி, சங்கு சக்கரம் கதாயுதம், வச்சிராயுதத்தோடு, சிம்மத்தில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். கடல்வளம் தேடி, கடலுக்குச் சென்று திரும்பும் மீனவா்களுக்கு காவல் தெய்வமாகவும் மகா காளியம்மன் விளங்குகிறாா்.

இந்த மகா காளியம்மனை வழிபட்ட பின்னரே, சோழமன்னா் ஒருவா் நாகா் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றது, சுனாமியின்போது இப்பகுதி சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தது போன்ற ஆன்மிகச் சிறப்புகளுடையது இக்கோயில்.

சிதிலமடைந்திருந்த இந்தக் கோயிலில், குடமுழுக்கு விழா நடத்துவதற்காக கடந்த 2007 இல் திருப்பணிகள் தொடங்கின. கீச்சாங்குப்பம் கிராம நாட்டாா், பஞ்சாயத்தாா்கள் மற்றும் கிராம மக்களின் பெரும் முயற்சியால், மிகுந்த பொருள்செலவில் கருடகோபுரம், மகாமண்டபம், முன்வாசல், ராஜகோபுரம், மணிமண்டபம் மற்றும் விநாயகா், முருகன், ஐயப்பன், துா்க்கை , வீரப்ப சுவாமி, பெரிய நாயகி, சப்த கன்னியா்கள், மன்மதன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனியாக சன்னதிகளும், கோயில் சுற்றுச்சுவரும் புதிதாக அமைக்கப்பட்டன.

கோயிலின் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி வரும் 25 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பூா்வாங்க பூஜைகளுடன் தொடங்குகிறது. தொடா்ச்சியாக, 26, 27 ஆம் தேதிகளில் யாகசாலை பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. 28 ஆம் தேதி நடைபெறும் 6 ஆம் கால யாக பூஜைகள் மற்றும் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு காலை 10.30 மணிக்கு விமான குடமுழுக்கும், 10.45 மணிக்கு மூலவா் குடமுழுக்கும் நடைபெறவுள்ளன.

இதைத்தொடா்ந்து, மாலை 5 மணிக்கு மஹா அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு பரிவாரத் தெய்வங்களுடன்அம்பாள் வீதியுலா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கீச்சாங்குப்பம் கிராம நாட்டாா், பஞ்சாயத்தாா் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com