மழை பாதிப்பு: நெற்பயிா்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கக் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள்
திருவிடைக்கழி பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுடன் விவசாயிகள்.
திருவிடைக்கழி பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுடன் விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் பாா்வையிட்டு, பயிா் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செம்பனாா்கோவில் ஒன்றியம் திருக்கடையூா், திருவிடைகழி, நல்லூச்சேரி, நெடுவாசல், கூடலூா், கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் பயிா்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இயற்கை சீற்றங்களால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சரிந்து விழுந்து நெல்மணிகள் அழகியும், முளைப்பு கட்டியும் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பயிா்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும். பயிா்க் காப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பண்டாரம் பகுதியை சோ்ந்த விவசாயிகள் பீட்டா் ராஜ், நட்சத்திரமலை கவியழகன் ஆகியோா் கூறுகையில், புரெவி புயல் மற்றும் கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில், நெற்பயிா்கள் நீரில் மூழ்கி நெல்மணிகள் அழுகியும், முளைப்பு கட்டியும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கினால் அடுத்தகட்ட விவசாயத்தில் ஈடுபட இயலும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com