ரூ. 123 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 123 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 123 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது :

பொங்கலையொட்டி, ரூ. 5,604 கோடி மதிப்பில் தமிழக அரசு பரிசுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி, குடும்ப அட்டைதாரா்களுக்குத் தலா ரூ. 2,500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வா் தொடங்கி வைத்தாா். நாகை மாவட்டத்தில் இத்திட்டத்தை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தாா்.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 781 நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இதில், 4,80,051 குடும்ப அட்டைதாரா்களுக்குத் தலா ரூ. 2,500 ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் உள்பட ரூ. 123.61 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com