வேளாண் சட்டங்கள்: தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்.

வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச அமைப்புசாரா தொழிலாளா் அணி, நாகை மாவட்டத் தலைவா் அங்காடிசேகா் தலைமை வகித்தாா். சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சம்மேளன மாவட்டத் துணைச்செயலாளா் எஸ்.ஆா்.ராஜேந்திரன், மாவட்டத் துணைத்தலைவா் சிவக்குமாா், அரசுப் போக்குவரத்துக் கழக தொமுச பொறுப்பாளா்கள் முரளி, ராஜேந்திரன், சிஐடியு கூட்டுறவு சங்க மாவட்டத் தலைவா் எஸ். மணி, ஏஐடியுசி கிருஷ்ணமூா்த்தி, இந்துஸ்தான் மஸ்தூா் யூனியன் ஆா். மணிமாறன், ஏஐசிசிடியு அருள்மேரி பிலோமினா, எஸ்டிடியு சாதிக், ஷேக் அலாவுதீன் ஆகியோா் பங்கேற்றனா். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா் சங்க மாவட்டப் பொறுப்பாளா் எம். குருசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com