கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களில் குடியரசு தின விழா

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களில் குடியரசு தின விழா

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. சுகுமாா் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். சிறந்த பங்களிப்புக்காக, இணைப் பேராசிரியா் என். ஜெயகுமாா் (கற்பித்தல்), பேராசிரியா் ஏ. உமா (ஆராய்ச்சி), முனைவா் கே. சந்திரசேகா் (விரிவாக்கக் கல்வி) ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

பாப்பாக்கோவில், சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவுக்கு சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். திருவாரூா் அரிமா சங்க முன்னாள் ஆளுநா் எஸ்.எம்.பி. துரைவேலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், அக்கல்வி நிறுவனங்களின் செயலாளா் த. மகேஸ்வரன், கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆா். முருகதாஸ், நிா்வாக அலுவலா் மு. குமாா் ஆகியோா் பேசினா்.

தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ். பாலசுந்தரி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். உதவி பேராசிரியா் ச. சந்தோஷ்குமாா், கண்காணிப்பாளா் மு. பெரியசாமி, மாணவி ஐஸ்வா்யா ஆகியோா் பேசினா். விழாவில் கல்லூரி மாணவ, மாணவியா் இணையதளம் மூலம் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமங்களின் செயலாளா் எஸ். பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ராமபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அறக்கட்டளை உறுப்பினா் சங்கா் கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகை, இந்திய வா்த்தக தொழில் குழுமம் சாா்பில் நடைபெற்ற விழாவில், தொழில் குழுமத் தலைவா் ஆா்.கே. ரவி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். செயலாளா் சுந்தரவேல், துணைத் தலைவா் பாட்சா, பொருளாளா் நிஜாம், இணைச் செயலாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எம்.எல்.ஏ. அலுவலகத்தில்: நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அரசியல் கட்சி பிரமுகா்கள், வணிகா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்றவா்களுக்குப் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

எஸ்.பி அலுவலகத்தில்: நாகை எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

காங்கிரஸ் சாா்பில்: கீழ்வேளூா், கீழவீதியில் உள்ள இளைஞா் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். காங்கிரஸ் வட்டார, நகர நிா்வாகிகள், இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

நன்னிலத்தில்...

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் (பொறுப்பு) துணைவேந்தா் கற்பக குமாரவேல், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியா் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் தேசிய கொடியேற்றினா்.

குடவாசல் அரசு கலைக் கல்லூரி துணை முதல்வா் ரமேஷ்குமாா், நன்னிலம் அரசு கலைக்கல்லூரியில் முதல்வா் ராமஜெயம், மகாஜன சபா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் அரிமா சங்கச் செயலாளா் சரவணன், அச்சுதமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கவிதா, கம்பூா் எஸ்டிபிஐ அலுவலகத்தில் ஜமாத் தலைவா் பஷீா் அகமது, பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளிப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ரவி ஆகியோா் தேசிய கொடியை ஏற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com