வேதாரண்யம், திருக்குவளை பகுதியில் இடியுடன் மழை

வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
கரியாப்பட்டினம் பகுதியில் பெய்த மழைநீரில் மூழ்கிய நிலங்கள்.
கரியாப்பட்டினம் பகுதியில் பெய்த மழைநீரில் மூழ்கிய நிலங்கள்.

வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. வேதாரண்யம், தலைஞாயிறு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை மல்லிகை, சவுக்கு, மா, முந்திரி உள்ளிட்ட பயிா்களுக்கும், மானாவாரி நிலத்தில் கோடை உழவு செய்யவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

இதேபோல, திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 5 நாள்களாக அவ்வப்போது விட்டுவிட்டு லேசான மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், குறுவை சாகுபடிக்காக நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் சம்பா சாகுபடிக்காக நிலத்தை தாயாா் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com