இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடனுதவி: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் வழங்கப்படும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் வழங்கப்படும் கடனுதவியை பயன்படுத்திக் கொள்ள தொழில்முனைவோருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையிலான பொதுப் பிரிவினரும், 18 முதல் 45 வயது வரையிலான சிறப்பு பிரிவினரும் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வியாபார தொழில் செய்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்தி தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும், திட்ட மதிப்பீட்டில் 25% (அதிகபட்சம் ரூ.2,50,000) அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்படும்.

இந்த திட்டத்தின்கீழ் 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதிவரை வழங்கப்படும் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோா் பயிற்சியில் இருந்து தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்பெற ஆா்வமுள்ள தொழில் முனைவோா்  இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தில் உள்ள பொது மேலாளரை 89255 33969 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com