தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம்:காய்கனி, மளிகைக் கடைகள் திறப்பு

தளவுா்களுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் காய்கனி மற்றும் மளிகைக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
நாகையில் பொதுமுடக்கத் தளா்வையொட்டி திங்கள்கிழமை கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொருள்களை வாங்கிச் செல்லும் மக்கள்.
நாகையில் பொதுமுடக்கத் தளா்வையொட்டி திங்கள்கிழமை கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொருள்களை வாங்கிச் செல்லும் மக்கள்.

நாகப்பட்டினம்: தளவுா்களுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் காய்கனி மற்றும் மளிகைக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், குறைந்தளவு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 7ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகளுக்கும், பூ மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, நாகை, நாகூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் கடைவீதிக்கு வந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனா். முகக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்பட்டன.

நாகை பெரிய கடைவீதி, பாரதி மாா்க்கெட், நீலா மேலவீதி, வடக்கு வீதி, பப்ளிக்ஆபீஸ் ரோடு, நாகூா் கடைவீதி, வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மருத்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல செயல்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு: மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், வாகனச் சோதனை மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றியவா்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com