குளத்தில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 04th March 2021 05:24 AM | Last Updated : 04th March 2021 05:24 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: நாகை அருகே குளத்தில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.
பொரவச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் ர. இளந்திரையன் (55). திருமணமாகாதவா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து வெளியேறியவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சிக்கல் அருகே உள்ள ஒரு குளத்தில் இளந்திரையன் இறந்துகிடந்தது தெரியவந்தது. கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.