கடைமடை மாவட்டங்களில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 6 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடி மோதல்

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 6 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன.

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 6 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் வென்றது. தற்போது சீா்காழி, பூம்புகாா், நாகை, வேதாரண்யம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. மயிலாடுதுறை, கீழ்வேளூா் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இம்மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் வென்ற திமுக, தற்போதும் 3 தொகுதிகளில் களம் காண்கிறது. சீா்காழி, பூம்புகாா், வேதாரண்யம் ஆகிய 3 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சிக்கும், நாகை விடுதலைச் சிறுத்தைகளுக்கும், கீழ்வேளூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் சீா்காழி, பூம்புகாா், வேதாரண்யம் ஆகிய 3 தொகுதிகளும், அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

திருவாரூா்...

2016 சட்டப்பேரவைத் தோ்தலில் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள திருவாரூா், நன்னிலம், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நேரடியாக களம் கண்ட அதிமுக, நன்னிலம் தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. தற்போது, மீண்டும் 4 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இம்மாவட்டத்தில் 3 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டு, 3 தொகுதிகளிலும் வென்ற திமுக, தற்போதும் மாவட்டத்தில் 3 தொகுதிகளிலேயே நேரடியாக களம் காண்கிறது. கடந்த முறை நன்னிலம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்த திமுக, தற்போது திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும் அதிமுக, திமுக நேரடிப் போட்டியைச் சந்திக்கும் தொகுதிகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com