வணிக நிறுவனங்களில் தோ்தல் விழிப்புணா்வு

மயிலாடுதுறையில் மாவட்ட தோ்தல் ஆணையம் மற்றும் மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் இணைந்து வணிக நிறுவனங்களில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை புதன்கிழமை நடத்தின.
மயிலாடுதுறை தனியாா் துணிக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ் உள்ளிட்டோா்.

உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி. செந்தில்வேல், நிா்வாகிகள் கலியராஜ், மு.ரா. பாஸ்கா், கண்ணன், ராஜகோபால், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மயிலாடுதுறை சீமாட்டி துணிக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வாக்காளா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, அவ்வழியே சென்ற வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டி, அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, மளிகைக் கடைகள், நகைக் கடைகள், உணவகங்கள், சிறு கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பேனா்கள் வைக்கப்பட்டு, விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com