திருமருகலில் விசிக வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸ் வாக்கு சேகரிப்பு

திருமருகல் ஒன்றியத்தில் நாகை சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸ் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
நரிமணம் ஊராட்சியில் வாக்குச் சேகரித்த விசிக வேட்பாளா் ஜெ. முகமது ஷாநவாஸ்.
நரிமணம் ஊராட்சியில் வாக்குச் சேகரித்த விசிக வேட்பாளா் ஜெ. முகமது ஷாநவாஸ்.

திருமருகல் ஒன்றியத்தில் நாகை சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸ் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

திருமருகல் தெற்கு ஒன்றியத்தில் பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம் கோபுராஜபுரம், எரவாஞ்சேரி மருங்கூா், நெய்க்குப்பை உள்ளிட்ட ஊராட்சிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். இதில் திருமருகல் ஒன்றியச் செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன், மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.இளஞ்செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரபோஜி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சம்பந்தம், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் இளம் சுந்தா், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் பாபுஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் ஜெயபால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி செயலாளா் அறிவழகன், தெற்கு ஒன்றியச் செயலாளா் காசிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் மஞ்சுளா மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com